யோகநித்திரை அல்லது அறிதுயில் - மறைமலையடிகள்Yoga Nithirai allathu Arithuyil by Maraimalai Adigal was first published in 1922.மக்கள் வாழ்க்கையைப் பலதுறைகளிலுஞ் சீர்திருத்தஞ்செய்து அறியாமையால் வரும் எண்ணிறந்த துன்பங்களையும் எளிதாகப் படிப்படியாய் விலக்கி, உயிரைத் தூயதாக்கி, இப்பிறவியில் அடைதற்கு உரிய மெய்யறிவு இன்பங்களையும்,வரும் பிறவியில் நுகர்தற்குரிய பேரறிவு இன்பங்களையும் பிழையாமல் எய்துதற்கு இந்நூல் உண்மை வழி காட்டுவதா மென்பதை இதனைக் கருத்தூன்றிக் கற்று, இதிலுள்ளமுறைகளை நன்கு பழகி வருவாரெல்லாரும் தாமே இனிது உணர்வர். இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் பொருள்கள்,யாமறிந்தமட்டில், தமிழ்மொழியில் இதற்கு முன் இவ்வளவு அழகாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எவராலும் திருத்தமாக எழுதப்படவில்லை.