சைவ சித்தாந்த ஞானபோதம் - மறைமலையடிகள்Saiva Siddhanta Gnanabotham by Maraimalai Adigal first published in 1906.கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் இனிது விளங்கும்பொருட்டுப் பற்பல ஊர்களிலும் பற்பல நகர்களிலும் அவைக்களங்களில் யாம்நிகழ்த்திய சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளின் ஒரு தொகுதியே 'சைவ சித்தாந்த ஞானபோதம்' என்னும் இந் நூலின்கட் பெரும்பாலும் அடங்கி யிருக்கின்றன.