மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள்Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927.'மனித வசியம்' என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்த ஆற்றலானது இயற்கையாக எல்லாரிடத்துங் காணப்படவில்லை. சிலரிடத்து மட்டுமே காணப்படுகின்றது.நல்லது. சிலரிடத்தும் மட்டும் உள்ள இந்த ஆற்றல் எதனால் உண்டாகின்றதென்றால், அவரிடத்தமைந்த அழகினால் என்று பெரும்பாலும் எல்லாரும் நினைக்கின்றார்கள். ஆனாலும் , இஃது உண்மையாகத் தோன்றவில்லை.