வேளாளர் நாகரிகம் - மறைமலையடிகள்Velaalar Nagariam by Maraimalai Adigal was first published in 1923.நமக்கு நண்பராயுள்ள சைவ வேளாளர் சிலர் வேளாளரின் பண்டை உண்மை வரலாறுகளை ஆராய்ந்து ஒருகட்டுரை விரைந்தெழுதும்படி எம்மைப் பெரிதுவேண்டினர். பண்டைக்காலந் தொட்டு நம் செந்தமிழ் மக்களில் நாகரிகத்தாற் சிறந்து வாழ்ந்து, தமிழ்மொழியையுஞ் சிவ வழிபாட்டையும்நிலைநிறுத்தி ஆரியரையுந் திருத்தி நல்வழிப் படுத்தினோர் வேளாளரே என்பது எமது ஆராய்ச்சியில் நன்கு புலப்பட்டமையால், 'வேளாளர் யாவர்?' என்பதனை விளக்குகையில் 'தமிழரது நாகரிகத்' தையும் உடன் விளக்க வேண்டுவது இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று.