நூலின் பெயர் ’இந்தியாவும் விடுதலையும்’ என்பது. இந்தி யாவின் விடுதலைக்குரிய வழி காண்பது நூலின் நோக்கம். இந் நோக்கமுடைய நூலில் இந்தியாவைப் பற்றிய சரித்திரக் குறிப்பு களையெல்லாம் நிரலே கிளந்து கூறவேண்டுவதில்லை. நூலின் நோக்கத்துக்கு அரண் செய்யவல்ல சரித்திரக் குறிப்புகள் சிலவற்றை ஆங்காங்கே பொறித்தல் சாலும். உலகிற்கு நாகரிகம் வழங்கிய நாடுகள் சிலவே. அவற்றுள் குறிக்கத்தக்கன இந்தியா, எகிப்து, கிரீஸ், பாபிலோன், சீனம், பார சீகம் முதலியன.