ஆலமும் அமுதமும் - திரு. வி. கலியாணசுந்தரனார்Aalamum Amutamum by Thiru. V. Kalyanasundaram was first published in 1944.ஒருவன் 'உலக வாழ்க்கையே வேண்டாம்' என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்?சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது.இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய்நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும்போதெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய் நிகழ்ந்து வருகிறது.