அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்குஇன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது;அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்ச்சிக்கும்ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும்.அறிவு-வினை-அன்பு, இவை முறையே வடமொழியில்ஞானம்-கருமம்-பக்தி எனப்படும். பொதுப்படக் கருமம் என்றுகூறும்போது நிஷ்காமிய கருமம் என்று கொள்ளல் வேண்டும்.நிஷ்காமிய கருமமாவது பயன் கருதாது புரியும் வினை. பயன்கருதா வினையில் கூரய அறிவு மலர்ந்து, உண்மை அன்புசொரியும்.