'பிள்ளைகளுக்காகப் பல பாடல்கள் பாடியிருக்கிறீர்களே, கடவுளைப் பற்றிப் பாடியிருக்கிறீர்களா?' என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். 'முதல் முதலாகப் பத்திரிகையில் வெளிவந்த எனது பாடலே கடவுளைப் பற்றிய பாடல்தான். என் முதல் புத்தகத்தில் முதலாவதாக இருக்கும் பாடலும் அதுவே. ’கண்ணன் எங்கள் கண்ணனாம் என்று தொடங்கும் அந்தப் பாடல்...' 'என்ன! ’கண்ணன் எங்கள் கண்ணனாம்’ பாடல் நீங்கள் எழுதியதா? அது ஏதோ ஒரு நாடோடிப்பாடல் என்றல்லவா நினைத்தேன். பல ஆண்டுகளாகக் கேட்டுவருகிறேனே! எப்போது எழுதினீர்கள்?' 1944-ஆம் ஆண்டில்'